தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Thursday, February 28, 2008

குண்டுவெடிப்பு

சில உயிர்கள் பிணமாய் இருப்பதால்
பல உயிர்கள் பிணங்களாகின்றன
குண்டுவெடிப்பில்....

Labels: ,

Tuesday, February 26, 2008

அனுபவம் 1

கும்பகோண தீ விபத்திற்கு நிதி திரட்டுவதற்காக எங்கள் கல்லூரியில் "காக்க காக்க" திரைப்படத்தை திரையிட்டனர். எங்க வகுப்பிலிருந்து 25 க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தோம்.

மறுநாள் வகுப்பில் எங்களுக்கு வார தேர்வு, எவரும் படிக்கவில்லை. ஆசிரியை வந்து கேள்விகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் அனைவரும் திருதிருவென முழித்தோம். அவரே புரிந்து கொண்டு யாரும் படிக்கவில்லையா? என வினவினார், ஆம்! என்றோம்.

நேற்று யார் யார் படம் பார்க்க சென்றீர்கள்? என கேட்டார். எனது தோழி உடனே எழுந்து நின்றுவிட்டாள், நானும் எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை. (நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்போமென கல்லூரியில் எங்களை தெரிந்த அனைவருக்கும் தெரியும்) வேறுயாரும் எழவில்லை.

இவர்களாவது உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார்கள்! என்று சொல்லி, எங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அனைவரையும் அவர் கொடுத்த கேள்விகளை இம்போசிசன் எழுத சொல்லிவிட்டார் ஆசிரியை.

அந்த வகுப்பு முடிந்ததும் எங்கள் இருவருக்கும் விழுந்தது பாருங்கள் அடி... நினைத்தாலே இன்னும் வலிக்கிறது....

Labels: ,

Sunday, February 24, 2008

அன்பு

குழந்தையின் சிரிப்பு
காதலின் வெளிப்பாடு
கண்களின் பேச்சு
உதடின் புன்னகை
- அன்பின் பிறப்பிடம்..

Labels: , ,

Saturday, February 16, 2008

செண்பக மலர்


Labels: ,

Friday, February 15, 2008

பொங்கலோ பொங்கல்...






Labels: ,

Thursday, February 14, 2008

ரோஜா

எங்கள் வீட்டு ரோஜா

Labels: , ,

Saturday, February 9, 2008

நகைச்சுவைகள்

நான் சிரித்ததில் சில நகைச்சுவைகள் உங்களுக்கும்..


"தாத்தா, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க! டீச்சர் வர்றாங்க..."
"நான் எதுக்கு ஒளியனும்?"
"நீங்க செத்துப்போயிட்டதா சொல்லி நேத்து லீவ் போட்டிருந்தேன்!"

-------
சார்: பொதிகை மலை எங்கு இருக்கு?
ஸ்டுடென்ட்: தெரியல சார்..
சார்: பென்ச் மேல ஏரு..
ஸ்டுடென்ட்: பென்ச்ல ஏருனா தெரியுமா சார்?

-------
"உங்க ஓட்டலோட பிராஞ்ச் பக்கத்து தெருவுல இருக்கே.. இங்க உள்ள பலகாரத்துக்கும் அங்கே உள்ள பலகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு நாள்தான்!"

-------
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

-------
காதலன் : அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?
காதலி : வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..
காதலன்: என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?காதலி: நமக்கு இல்லே.. எனக்கு.. கண்ட கழுதையோட சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!

-----
சுட்டிப்பையன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?

------
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பையன்: ஸ்கூல்லையா?? வீட்லையா டீச்சர்??

-------
ஆசிரியர்: எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயொ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கொரசக) : புரியல சார்...

Labels: , , ,

Saturday, February 2, 2008

வெண்ணிலவே வெண்ணிலவே

எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.
படம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்


வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட (வெண்ணிலவே)


பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா?
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா? மரமா?
அன்பே உன் கையில் நான் விரலா? நகமா?
நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா?
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே
நீ ஆணாய் பிறந்து வருவாய்
உன் போலே பெண்ணை நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின் வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை எழுதியவன் அவனே
எனக்கு ஒரு முடிவை ஏன் இன்னும் சொல்ல வில்லை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
அவன் ஊமை இல்லை இல்லை.. (வெண்ணிலவே)

Labels: ,

அனைவருக்கும் வணக்கம்!!!

உங்களின் பக்கங்களை படித்ததால் எனக்கும் பதிவுப்போட ஆசை....
தமிழ் பூக்களை ஒரு பூ மூலமாய் தொடங்குகிறேன்.


பிரியமுடன்..
உங்களின் வரவை விரும்பும் மலர்.

Labels: , ,