தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Sunday, March 16, 2008

உள்ளத்தில் பலவித எண்ணங்கள்!!!


பெற்றவர்களை, பிறந்த வீட்டை, தன்னை

என எதையுமே பார்த்திராத

அந்த மாமனிதனை பார்க்கையில்.....


கடவுளை சபித்தல் அம்மனிதனை இவ்வாறு படைத்ததற்கு...

பின் அக்கடவுளிடமே அம்மாமனிதனை காக்க வேண்டுதல்....


நெல்லி மரம்

எங்க வீட்டு நெல்லி....



Labels:

Saturday, March 1, 2008

அனுபவம் 2

இதுவும் என் கல்லூரி அனுபவம்.

தமிழ் தேர்வு விடைத்தாள் கொடுத்து கொண்டிருந்தார் ஆசிரியை. திடிரென கச்சிராயப்பாளையம் யாருடைய ஊர்! என்றார். நான் எங்க ஊர் என்றேன். உடனே என் தோழியின் பெயரை அழைத்தார்..

மணிமேகலை கச்சிராயப்பாளையத்தில் அட்சய பாத்திரம் பெற்றது உனக்கு எப்படி தெரியும்! என்றார். அவள் உடனே நான் தான் அவளுக்கு சொன்னேன் என சொல்ல, வகுப்பில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

எப்பவும் எங்க குருப்பில் மூவருக்கு தமிழ் என்றால் கொஞ்சம் அலர்ஜி. படித்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை கதையாக அவர்களுக்கு சொல்லிவிடுவது வழக்கம்.
அதுபோல் தான், நான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்ற கதையை சொல்லி கொண்டிருந்தேன். அதில் மணிபல்லவ தீவிலுள்ள கோமுகி நதியில் அட்சய பாத்திரம் கிட்டியதாக வரும். என் இந்த தோழிக்கு கோமுகி என்ற வார்த்தை மனதில் பதியவில்லை. ஆதலால் நான் எங்க ஊரில் உள்ள கோமுகி டேமை நினைவில் வைத்துகொள் என்றேன். (எங்க ஊரில் கோமுகி டேம் இருப்பது அவளுக்கு தெரியும்).

அதற்கு தான் கோமுகி நதி எந்த ஊரில் உள்ளது? என்ற வினாவிற்கு கச்சிராயப்பாளையம் என்று பதில் எழுதியுள்ளாள் என் அருமை தோழி.

Labels: , , ,