தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Saturday, May 24, 2008

சவாலே! சமாளி!



பண்ணையார் ஒருவர் ஏழை விவசாயிக்கு நிறையக் கடன் கொடுத்தார். அவரது உள்நோக்கம் மிகவும் கொடுமையானது. அந்தக் கிழட்டுப் பண்ணையாருக்கு விவசாயியின் அழகான இளம் பெண் மீது ஒரு கண். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள சூழ்ச்சி செய்தார். ஒரு நாள், "கடனை எல்லாம் திருப்பிக் கொடு அல்லது உன் பெண்ணைத் திருமணம் செய்து கொடு" என்று நச்சரித்தார்.


விவசாயி மகள் தீவிரமாக எதிர்த்தாள். பண்ணையார் ரொம்ப நல்லவர் போல நடித்து, 'மாரியம்மன் கோயிலில் இப்பவே திருவுளச் சீட்டு குலுக்கிப்போட்டு எடுப்போம். அந்தப் பெண்ணே எடுக்கட்டும். கல்யாணம் செய்துகொள்... என்று சீட்டில் வந்தால் திருமணம் நடக்கும்' என்று உறுமிவிட்டுத் தன் கையில் இருந்த இரண்டு சீட்டுகளை குலுக்கிக் காட்டினார்.


விவசாயி மகள் அசரவில்லை, கொஞ்சம் யோசித்ததும் பண்ணையாரின் வஞ்சனை புரிந்துவிட்டது. அவரைக் காட்டிக் கொடுக்காமல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தாள்.


மாரியம்மன் கோயிலில் ஊரே கூடி இருந்தது. சீட்டைக் குலுக்கிப் பண்ணையார் போட்டதும் ஒரு சீட்டை எடுத்து டபக்கென்று வாயில் போட்டு மென்று தின்றாள் விவசாயி மகள்.
"அடடா அந்தச் சீட்டில் என்ன எழுதி இருந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று ஊர்ப் பஞ்சாயத்துக் கேட்டது. "இதிலென்ன கஷ்டம்? அந்த இன்னொரு சீட்டை எடுத்துப் பாருங்கள். நான் எடுத்த சீட்டு அதற்கு எதிரானது, அவ்வளவுதானே!" என்றாள் அந்தப் புத்திசாலிப் பெண்.


பண்ணையாருக்கு அசடு வழிந்தது. இன்னொரு சீட்டும் "திருமணம் செய்து கொள்" என்று வந்ததால் முதல் சீட்டு "திருமணம் வேண்டாம்" என்று ஊர் முடிவு செய்தது.


சவாலைச் சந்திப்பது என்று நாம் முடிவு செய்துவிட்டால் எப்படிச் சந்திப்பது என்கிற வழிமுறை நிறைய தோன்றும்.


குறிப்பு: சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் புத்தகத்தில் இருந்து எடுத்தது.

Labels: ,

Friday, May 16, 2008

குண்டுவெடிப்பு -2

யாரையோ பழிவாங்கும் எண்ணத்தில்

நீ குண்டு வைக்க

பல குடும்பங்கள் இன்று கண்ணீரில்.....

உன் ஒரு குடும்பம் மட்டும்......???

Labels:

Sunday, May 4, 2008

சோளக்காடு

எங்க ஊரு சோளக்காடு





Labels: , ,