தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Wednesday, May 20, 2009

கிராம வாழ்க்கையின் அருங்காட்சியகம்

ஒரு கிராம வாழ்க்கைய கண்முன்னாடி கொண்டுவந்துருக்காங்க.... இவ்வளவு சிறப்பான அருங்காட்சியகம் நம்ம இந்தியால இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.































வாழ்க்கைல ஒருமுறையாவது கண்டிப்பா சென்று பார்க்கவேண்டிய இடம்... மேலும் படங்கள் மற்றும் செய்திகளுக்கு http://www.siddhagirimuseum.org/ இங்கு சென்று பார்க்கவும்.
Siddhagiri Gramjivan Wax Museum (Kaneri Math) at Kaneri near Kolhapur, Maharashtra.

Saturday, May 16, 2009

ஒரு கல் ஒரு கண்ணாடி....

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
குரல் : அட்னான் சாமி

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே (ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் என்றால் பெண்ணே சித்திரவதை தானே (ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல...(ஒரு கல்..)

Labels: , ,

Sunday, March 8, 2009

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்


படம் : சுப்பிரமணியபுரம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடகர்கள் : பெலி ராஜ் & தீபா மரியம்


ஆ…..ஆ….

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன்
மாற்றிக் கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பெண் : திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல்வந்து கலந்திட்டாய்


ஆண் : உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான்
நினைப்பேன் நகர்வேனே மாற்றி

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

Labels: , ,

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா & பிரசன்னா

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்


கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்


கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்....

Labels: , ,

Thursday, December 25, 2008

க‌விதை

ப‌டித்த‌தில் பிடித்த‌ சில‌ க‌விதைக‌ள்
ஒற்றை ரோஜா

தோட்ட‌ம் போட‌ம‌லே
நீர் ஊற்றாம‌லே
அழ‌காய் பூத்திருக்கு
ஒற்றை ரோஜா
அவ‌ள் கூந்த‌லில்...

ர‌ச‌னை

நிர்வாண‌மாய் நீந்தும் மீன்
ர‌சிக்கிற‌தோ
குள‌க்க‌ரையில்...
ஒற்றைக்காலில் கொக்கு!!!

நாக‌ரிக வ‌ள‌ர்ச்சி

மொஹ‌ஞ்ச‌தாரோ, ஹர‌ப்பா‍‍‍வை
தோண்டி தோண்டி எடுத்தோம் அன்று
இன்றும் தோண்டி எடுக்கிறோம்
மொக‌ஞ் சித‌ற‌ அப்ப‌ப்ப‌
வெடிகுண்டுக‌ளை...!!!

Labels: , ,

Tuesday, December 23, 2008

சாமிகிட்ட... சொல்லி புட்டேன்...

சாமிகிட்ட... சொல்லி புட்டேன்...
உன்ன நெஞ்சில்... வச்சி கிட்டேன்...

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்...
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்....
(சாமிகிட்ட சொல்லி)

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்....
(சாமிகிட்ட சொல்லி)

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி...
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல...
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே...
(சாமிகிட்ட சொல்லி)

மனசுக்குள்ள பொத்தி மறச்ச‌...
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச...
நெசத்திலதான் தயங்கி நடிச்ச...
அடி போடி பயந்தாங்கொள்ளி...
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?
(சாமிகிட்ட சொல்லி)

Labels: , ,

சூரியா, ஜோதிகா‍‍வின் காத‌ல் சின்ன‌ம்


Labels: , ,

Saturday, October 18, 2008

குட்டிமா

தாய் மடியில் முத்தமிட்ட
சில நிமிடங்களில் நான்...

Labels: ,

Monday, August 4, 2008

Micro Art


Ramesh Sha, a micro artist, exhibits an anti-terrorism
message through a painting on his nails in Siliguri.

Labels: , ,

Sunday, June 15, 2008

வித்தியசமான படங்கள் 1

Saturday, May 24, 2008

சவாலே! சமாளி!



பண்ணையார் ஒருவர் ஏழை விவசாயிக்கு நிறையக் கடன் கொடுத்தார். அவரது உள்நோக்கம் மிகவும் கொடுமையானது. அந்தக் கிழட்டுப் பண்ணையாருக்கு விவசாயியின் அழகான இளம் பெண் மீது ஒரு கண். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள சூழ்ச்சி செய்தார். ஒரு நாள், "கடனை எல்லாம் திருப்பிக் கொடு அல்லது உன் பெண்ணைத் திருமணம் செய்து கொடு" என்று நச்சரித்தார்.


விவசாயி மகள் தீவிரமாக எதிர்த்தாள். பண்ணையார் ரொம்ப நல்லவர் போல நடித்து, 'மாரியம்மன் கோயிலில் இப்பவே திருவுளச் சீட்டு குலுக்கிப்போட்டு எடுப்போம். அந்தப் பெண்ணே எடுக்கட்டும். கல்யாணம் செய்துகொள்... என்று சீட்டில் வந்தால் திருமணம் நடக்கும்' என்று உறுமிவிட்டுத் தன் கையில் இருந்த இரண்டு சீட்டுகளை குலுக்கிக் காட்டினார்.


விவசாயி மகள் அசரவில்லை, கொஞ்சம் யோசித்ததும் பண்ணையாரின் வஞ்சனை புரிந்துவிட்டது. அவரைக் காட்டிக் கொடுக்காமல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தாள்.


மாரியம்மன் கோயிலில் ஊரே கூடி இருந்தது. சீட்டைக் குலுக்கிப் பண்ணையார் போட்டதும் ஒரு சீட்டை எடுத்து டபக்கென்று வாயில் போட்டு மென்று தின்றாள் விவசாயி மகள்.
"அடடா அந்தச் சீட்டில் என்ன எழுதி இருந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று ஊர்ப் பஞ்சாயத்துக் கேட்டது. "இதிலென்ன கஷ்டம்? அந்த இன்னொரு சீட்டை எடுத்துப் பாருங்கள். நான் எடுத்த சீட்டு அதற்கு எதிரானது, அவ்வளவுதானே!" என்றாள் அந்தப் புத்திசாலிப் பெண்.


பண்ணையாருக்கு அசடு வழிந்தது. இன்னொரு சீட்டும் "திருமணம் செய்து கொள்" என்று வந்ததால் முதல் சீட்டு "திருமணம் வேண்டாம்" என்று ஊர் முடிவு செய்தது.


சவாலைச் சந்திப்பது என்று நாம் முடிவு செய்துவிட்டால் எப்படிச் சந்திப்பது என்கிற வழிமுறை நிறைய தோன்றும்.


குறிப்பு: சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் புத்தகத்தில் இருந்து எடுத்தது.

Labels: ,

Friday, May 16, 2008

குண்டுவெடிப்பு -2

யாரையோ பழிவாங்கும் எண்ணத்தில்

நீ குண்டு வைக்க

பல குடும்பங்கள் இன்று கண்ணீரில்.....

உன் ஒரு குடும்பம் மட்டும்......???

Labels:

Sunday, May 4, 2008

சோளக்காடு

எங்க ஊரு சோளக்காடு





Labels: , ,

Sunday, April 27, 2008

எங்க வீட்டு விருந்தாளி!!

Labels: ,

Sunday, April 20, 2008

காந்தள் மலர்

தமிழ்நாட்டின் தேசிய மலர்

Labels: , ,

Sunday, March 16, 2008

உள்ளத்தில் பலவித எண்ணங்கள்!!!


பெற்றவர்களை, பிறந்த வீட்டை, தன்னை

என எதையுமே பார்த்திராத

அந்த மாமனிதனை பார்க்கையில்.....


கடவுளை சபித்தல் அம்மனிதனை இவ்வாறு படைத்ததற்கு...

பின் அக்கடவுளிடமே அம்மாமனிதனை காக்க வேண்டுதல்....


நெல்லி மரம்

எங்க வீட்டு நெல்லி....



Labels:

Saturday, March 1, 2008

அனுபவம் 2

இதுவும் என் கல்லூரி அனுபவம்.

தமிழ் தேர்வு விடைத்தாள் கொடுத்து கொண்டிருந்தார் ஆசிரியை. திடிரென கச்சிராயப்பாளையம் யாருடைய ஊர்! என்றார். நான் எங்க ஊர் என்றேன். உடனே என் தோழியின் பெயரை அழைத்தார்..

மணிமேகலை கச்சிராயப்பாளையத்தில் அட்சய பாத்திரம் பெற்றது உனக்கு எப்படி தெரியும்! என்றார். அவள் உடனே நான் தான் அவளுக்கு சொன்னேன் என சொல்ல, வகுப்பில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

எப்பவும் எங்க குருப்பில் மூவருக்கு தமிழ் என்றால் கொஞ்சம் அலர்ஜி. படித்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை கதையாக அவர்களுக்கு சொல்லிவிடுவது வழக்கம்.
அதுபோல் தான், நான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்ற கதையை சொல்லி கொண்டிருந்தேன். அதில் மணிபல்லவ தீவிலுள்ள கோமுகி நதியில் அட்சய பாத்திரம் கிட்டியதாக வரும். என் இந்த தோழிக்கு கோமுகி என்ற வார்த்தை மனதில் பதியவில்லை. ஆதலால் நான் எங்க ஊரில் உள்ள கோமுகி டேமை நினைவில் வைத்துகொள் என்றேன். (எங்க ஊரில் கோமுகி டேம் இருப்பது அவளுக்கு தெரியும்).

அதற்கு தான் கோமுகி நதி எந்த ஊரில் உள்ளது? என்ற வினாவிற்கு கச்சிராயப்பாளையம் என்று பதில் எழுதியுள்ளாள் என் அருமை தோழி.

Labels: , , ,

Thursday, February 28, 2008

குண்டுவெடிப்பு

சில உயிர்கள் பிணமாய் இருப்பதால்
பல உயிர்கள் பிணங்களாகின்றன
குண்டுவெடிப்பில்....

Labels: ,

Tuesday, February 26, 2008

அனுபவம் 1

கும்பகோண தீ விபத்திற்கு நிதி திரட்டுவதற்காக எங்கள் கல்லூரியில் "காக்க காக்க" திரைப்படத்தை திரையிட்டனர். எங்க வகுப்பிலிருந்து 25 க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தோம்.

மறுநாள் வகுப்பில் எங்களுக்கு வார தேர்வு, எவரும் படிக்கவில்லை. ஆசிரியை வந்து கேள்விகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் அனைவரும் திருதிருவென முழித்தோம். அவரே புரிந்து கொண்டு யாரும் படிக்கவில்லையா? என வினவினார், ஆம்! என்றோம்.

நேற்று யார் யார் படம் பார்க்க சென்றீர்கள்? என கேட்டார். எனது தோழி உடனே எழுந்து நின்றுவிட்டாள், நானும் எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை. (நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்போமென கல்லூரியில் எங்களை தெரிந்த அனைவருக்கும் தெரியும்) வேறுயாரும் எழவில்லை.

இவர்களாவது உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார்கள்! என்று சொல்லி, எங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அனைவரையும் அவர் கொடுத்த கேள்விகளை இம்போசிசன் எழுத சொல்லிவிட்டார் ஆசிரியை.

அந்த வகுப்பு முடிந்ததும் எங்கள் இருவருக்கும் விழுந்தது பாருங்கள் அடி... நினைத்தாலே இன்னும் வலிக்கிறது....

Labels: ,

Sunday, February 24, 2008

அன்பு

குழந்தையின் சிரிப்பு
காதலின் வெளிப்பாடு
கண்களின் பேச்சு
உதடின் புன்னகை
- அன்பின் பிறப்பிடம்..

Labels: , ,

Saturday, February 16, 2008

செண்பக மலர்


Labels: ,

Friday, February 15, 2008

பொங்கலோ பொங்கல்...






Labels: ,

Thursday, February 14, 2008

ரோஜா

எங்கள் வீட்டு ரோஜா

Labels: , ,